தனியார் காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம்: குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சஸ்பெண்ட்...!

திருப்பூர் தனியார் காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தனியார் காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம்: குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சஸ்பெண்ட்...!
Published on

திருப்பூர்,

திருப்பூரை எடுத்த திருமுருகன்பூண்டியில் தனியாருக்கு சொந்தமான ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தில் 15 சிறுவர்கள் தங்கியிருந்தனர். இதில் ஒரு சிறுவன் ஆயுத பூஜைக்கு சொந்த ஊர் சென்று விட்டதால் மற்ற 14 பேரும் காப்பகத்திலேயே தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் சிறுவர்கள் அனைவரும் கடந்த 5-ம் தேதி இரவு ரசமும், லட்டும் சாப்பிட்டுள்ளார்கள். இதையடுத்து இரவு முதலே சிறுவர்களுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து காலை சிற்றுண்டி சாப்பிட்ட சிறுவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சிறுவர்கள் அனைவரும் அவிநாசி, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், மாதேஷ்(16), பாபு (13), ஆதிஷ்(8) ஆகிய 3 சிறுவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவம் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சமூக நல பாதுகாப்புத்துறை இயக்குநர் வளர்மதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த குழு விசாரணை மேற்கொண்டு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தனியார் காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதா பிரியாவை பணியிடை நீக்கம் செய்து சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com