காப்பகத்தில் 3 சிறுவர்கள் பலியான விவகாரம்: குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி பணியிடை நீக்கம்

காப்பகத்தில் 3 சிறுவர்கள் பலியான சம்பவத்தில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காப்பகத்தில் 3 சிறுவர்கள் பலியான விவகாரம்: குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி பணியிடை நீக்கம்
Published on

திருப்பூர்,

திருப்பூர் திருமுருகன்பூண்டியில் விவேகானந்த சேவாலயம் என்ற பெயரில் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. இங்கு கடந்த 5-ந்தேதி காலை உணவு சாப்பிட்ட சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 3 சிறுவர்கள் பலியானார்கள். 11 சிறுவர்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினர். ஈரோட்டில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சில மாணவர்கள் உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னதாக சிகிச்சையில் இருந்த சிறுவர்களை சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நலம் விசாரித்து விசாரணை மேற்கொண்டனர்.

பணியிடை நீக்கம்

அப்போது, 'குழந்தைகள் தங்கியிருந்த இடத்தை மெத்தனப்போக்காக கையாண்ட நிர்வாகி மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும், சிறுவர்கள் காப்பகம் மூடப்படும். ஏற்கனவே ஆய்வு செய்த மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி தொடர் கண்காணிப்பை மேற்கொள்ளாததால் அவர் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அமைச்சர் ஜீதாஜீவன் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி ரஞ்சிதா பிரியாவை பணியிடை நீக்கம் செய்து சமூக நலத்துறை இயக்குனர் வளர்மதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com