3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளை நாளை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்


3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளை நாளை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்
x

கோப்புப்படம் 

நாளை முதல் தி.மு.க. நிர்வாகிகளை தொகுதி வாரியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க இருக்கிறார்.

சென்னை

மதுரையில் கடந்த 1-ந் தேதி நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், "ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருந்து, என்னுடைய பணி என்னவென்றால், தி.மு.க. நிர்வாகிகளை தொகுதி வாரியாக, அண்ணா அறிவாலயத்தில் நான் சந்திக்க இருக்கிறேன். அப்போது இன்னும் விரைவாக, ஒன் டூ ஒன் பேசுவோம்." என்றார்.

அந்த வகையில், "உடன் பிறப்பே வா" என்ற தலைப்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல், தி.மு.க. நிர்வாகிகளை தொகுதி வாரியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க இருக்கிறார். சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளை முதல் நாளில் அவர் சந்திக்கிறார்.

1 More update

Next Story