

வேலூர்,
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் திடீர் உயிரிழந்துள்ளனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் 3 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகின.
அதனைதொடர்ந்து ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். மேலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கடந்த 2 மணி நேரமாக ஆக்ஸிஜன் வரவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் கொரோனா நோயாளிகள் 3 பேரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கவில்லை என அம்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மருத்துவமனை டீன், மற்றும் சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் தெரிவித்தனர்.