தேர்தல் பறக்கும் படை சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.3½ கோடி பறிமுதல்

சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 4-வது தளத்தில் மாநில அளவிலான வாக்காளர் குறைதீர்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

நடைபெற உள்ள தேர்தலில் பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவை, சோதனைச்சாவடிகளை நிறுவி பண நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த 17-ந் தேதி ரூ.2.10 கோடி ரொக்கப்பணம் மற்றும் தங்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதற்கிடையே தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று காலை 9 மணி வரையில் மேற்கொண்ட சோதனையில் ரூ.2.81 கோடி ரொக்கப்பணம், 0.26 கோடி மதிப்புள்ள மதுபானங்கள், 0.20 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள், 0.18 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.3 கோடி ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு உதவும் வகையில் சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 4-வது தளத்தில் மாநில அளவிலான வாக்காளர் குறைதீர்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் இலவச எண் 180042521950 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு வாக்காளர்கள் போன் செய்து தகவல்களை பெறலாம்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com