வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்ய 3 நாட்கள் சிறப்பு முகாம்

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கடந்த 12.11.2026 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்ய 3 நாட்கள் சிறப்பு முகாம்
Published on: 

சென்னை,

சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பான வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் 3 நாட்கள் நடைபெற உள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

சிறப்பு முகாம்கள்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கடந்த 12.11.2026 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் முகவரி மாற்றம் ஆகிய பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் சென்னை தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளன.

எந்தெந்த நாட்களில்..

எதிர்வரும் 29.11.2026 (ஞாயிற்றுக்கிழமை), 05.12.2026 (சனிக்கிழமை) மற்றும் 06.12.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இம்முகாம்கள் நடைபெறும்.

முதல் முறை வாக்காளர்கள்

எனவே வாக்காளர் பட்டியலில், இடம் பெறாத தகுதியுள்ள வாக்காளர்கள், புதிதாக பதிவு செய்யவுள்ள இளம் மற்றும் முதல் முறை வாக்காளர்கள், மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்ய விரும்பும் பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் இந்த சிறப்பு முகாம்களை அணுகிப் பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X