தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாளான வருகிற 16-ந்தேதி, ஜனவரி 25-ந்தேதி, ஜனவரி 26-ந்தேதி (குடியரசு தினம்) 'டாஸ்மாக்' கடைகளுக்கு ஆண்டுதோறும் விடுமுறை விடப்படுவது வழக்கம்.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை
Published on

காஞ்சீபுரம்,

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாளான வருகிற 16-ந்தேதி (திருவள்ளுவர் தினம்), ஜனவரி 25-ந்தேதி (வள்ளலார் நினைவு தினம்), ஜனவரி 26-ந்தேதி (குடியரசு தினம்) 'டாஸ்மாக் கடைகளுக்கு ஆண்டுதோறும் விடுமுறை விடப்படுவது வழக்கம். அரசின் இந்த அறிவிப்பை ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் தங்கள் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவார்கள்.

அந்த வகையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மதுபானம் விதிகள் 1981-ன்படி அனைத்து இந்திய தயாரிப்பு மதுபான கடைகள் (டாஸ்மாக்), அயல்நாட்டு மதுபான கடைகள் (எலைட்) மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் (பார்) ஆகியவை 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை), 25-ந்தேதி (வியாழக்கிழமை), 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 3 தினங்களில் நாள் முழுவதும் மூடப்பட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

எனவே இந்த தேதிகளில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 'டாஸ்மாக்', 'எலைட்' மதுபான கடைகள் மற்றும் அனைத்து வகை பார்கள் மூடப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com