தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் வெயில் சதம்

நேற்று 3 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் வெயில் சதம்
Published on

சென்னை,

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.மார்ச் மாதத்தில் சூடுபிடிக்க ஆரம்பித்த வெயிலின் அளவு தற்போது பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வருகிறது. இந்த நிலையில் நேற்று 3 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 105 டிகிரி பாரன்ஹீட் வெளியில் பதிவாகியுள்ளது. கரூர் பராமத்தி மற்றும் ஈரோடு மாவட்டத்தில் தலா 100.4 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

திருச்சி, மதுரை விமான நிலையத்தில் 99.68 டிகிரி பாரன்ஹீட், சென்னை மற்றும் தர்மபுரியில் 98.6 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com