சேலத்தில் இருந்து இயக்கப்பட்ட 3 விமானங்கள் நிறுத்தம்

அலையன்ஸ் ஏர் விமான நிறுவனத்தின் ஒப்பந்த காலம் வருகிற 16-ந்தேதியுடன் நிறைவடைகிறது.
சேலத்தில் இருந்து இயக்கப்பட்ட 3 விமானங்கள் நிறுத்தம்
Published on: 

சேலம்,

இந்த மாத இறுதியில் உதான் திட்டத்தின் கீழ் சேலத்தில் இருந்து இயக்கப்பட்ட 3 விமானங்கள் நிறுத்தப்படுகின்றன.

சேலம் விமான நிலையம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திற்கு இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் பயணிகள் விமானம் சென்னை-சேலம்-சென்னைக்கு இயக்கப்பட்டு வந்தது. இந்த விமானம் சென்னையில் இருந்து மதியம் 2.10 மணிக்கு புறப்பட்டு, மாலை 3.10 மணிக்கு சேலம் வந்து சேரும்.

இங்கிருந்து மீண்டும் மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு மாலை 4.40 மணிக்கு சென்னைக்கு செல்கிறது. அதேபோல் பெங்களூரு-சேலம்-கொச்சி, பெங்களூரு-சேலம்-பெங்களூரு, ஐதராபாத்-சேலம்-ஐதராபாத்துக்கு உதான் திட்டத்தின் கீழ் பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வந்தது.

விமான சேவை நிறுத்தம்

இந்தநிலையில் பெங்களூரு-சேலம்-கொச்சி நகரங்களுக்கு இயக்கப்பட்ட அலையன்ஸ் ஏர் விமான நிறுவனத்தின் ஒப்பந்த காலம் வருகிற 16-ந்தேதியுடன் நிறைவடைகிறது. அதேபோல் பெங்களூரு-சேலம்-பெங்களூரு. ஐதராபாத்-சேலம்-ஐதராபாத் இயக்கப்பட்ட இண்டிகோ ஏர் லைன் நிறுவனத்தின் ஒப்பந்த காலமும் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இந்த விமான சேவை அன்றைய தினத்துக்கு பிறகு இயக்கப்படாது என்பதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கூடுதல் விமான சேவை

வருகிற 25-ந்தேதி முதல் சென்னை-சேலம்-சென்னைக்கு இண்டிகோ நிறுவனம் சார்பில் கூடுதலாக ஒரு விமானம் இயக்கப்படுகிறது. கூடுதல் விமான சேவை பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், உதான் திட்டத்தில் இயக்கப்பட்ட 3 விமான சேவைகள் நிறுத்தப்படுவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com