தமிழ்நாடு தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் 3 பேர் கைது

சட்டசபை தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமைப் பெற்றவர்கள் சட்டவிரோதமாக வாக்களித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் 3 பேர் கைது
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்.23-ம் தேதி நடைபெற்றது. மே 4-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் த.வெ.க. வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை பெற முடியாமல் 108 இடங்களை மட்டுமே த.வெ.க. பெற்றது. முழு பெரும்பான்மையை அக்கட்சி பெறாத நிலையில், தி.மு.க. கூட்டணியில் இருந்த சில கட்சிகளின் ஆதரவை த.வெ.க. பெற்றுள்ளது. அதோடு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு, த.வெ.க. கட் சிக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளது.

பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் 13-ந் தேதிக்குள் (நேற்று) சட்டசபையில் பெரும் பான்மையை அரசு நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டிருந்தார். அதற்கான வாக்கெடுப்பு நேற்று சட்டசபையில் நடைபெற்றது. நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 144 பேரும், எதிராக 22 பேரும் வாக்களித்தனர். 5 பேர் நடுநிலை வகித்தனர். இதில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இந்தநிலையில், சட்டசபை தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமைப் பெற்றவர்கள் சட்டவிரோதமாக வாக்களித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சொந்த நாட்டுக்கு திரும்ப சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது கையில் மை இருந்ததை வைத்து கண்டுபிடித்து குடியேற்றத்துறை.

கனடா குடியுரிமை பெற்ற ஜிதேந்திரநாத், ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற சந்திரசேகர ரகுபதி, இலங்கையை சேர்ந்த ஒருவர் என 3 பேரை விமான நிலைய அதிகாரிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com