3 வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது

தேசூர் அருகே 3 வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
3 வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது
Published on

சேத்துப்பட்டு

தேசூரை அடுத்த மஞ்சம்பட்டு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்தா (வயது 40), அதே தெருவை சேர்ந்தவர் கண்ணன் (60), கூலி தொழிலாளி.

இவர்கள் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களின் பக்கத்து வீட்டில் தகர கொட்டகையில் சின்ன பாப்பா (75) என்பவர் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் வசந்தா, கண்ணன், சின்னபாப்பா ஆகியோரின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர்.

மேலும் தெள்ளார் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

தீ விபத்து எப்படி ஏற்பட்டது? மின்கசிவு காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என தேசூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com