நெல்லையில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

இது குறித்து டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
Published on: 

நெல்லை,

நெல்லை மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாகன சோதனை

இந்த நிலையில், டவுண் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் நேற்று ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா வைத்திருந்த சிவந்திப்பட்டியை சேர்ந்த மாரியப்பன் மகன் தமிழ்செல்வன் (33), டவுண் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் இசக்கிராஜா (22), வீரசங்கர் மகன் மதன் என்ற பாலகிருஷ்ணன் (21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து சுமார் 3 கிலோ கஞ்சா மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X