சிவகாசி அருகே பட்டாசுஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு


சிவகாசி அருகே பட்டாசுஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 21 July 2025 5:20 PM IST (Updated: 21 July 2025 6:09 PM IST)
t-max-icont-min-icon

பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் பல நூறு மீட்டர் தொலைவு எதிரொலித்தது.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் தற்போது உற்பத்தி பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தொழிலாளர் கவனமுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில், ஆண்டியபுரம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்குள்ள ஒரு அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதற ஆரம்பித்தன.பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் பல நூறு மீட்டர் தொலைவு எதிரொலித்தது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக வெடி விபத்து நிகழ்ந்த பகுதிக்கு விரைந்து தீயை அணைத்தனர்.

இந்த வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். வெடி விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள்.

1 More update

Next Story