சென்னையில் 3 மாத ஆண் குழந்தை திடீர் மரணம்: போலீசார் விசாரணை

சென்னை திருவொற்றியூர் பகுதியில் ஒரு பெண் தனது 3 மாத ஆண் குழந்தைக்கு பால் கொடுத்து தொட்டிலில் தூங்க வைத்தார்.
குழந்தை மரணம்
Published on

சென்னை,

சென்னை அருகே திருவொற்றியூர் பாலகிருஷ்ணன்நகர், செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த ஸ்ரீதர், ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி கீர்த்தனா. இவர்களுக்கு 3 மாதத்தில் சர்வேஸ்வரன் என்ற ஆண் குழந்தை இருந்தது.

குழந்தை திடீர் மரணம்:

கீர்த்தனா நேற்று அதிகாலையில் குழந்தைக்கு பால் கொடுத்து தொட்டிலில் தூங்க வைத்தார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது குழந்தை பேச்சு மூச்சு இன்றி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கி சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், குழந்தை உயிரிழந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com