அரசுப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3,000 ஆசிரியாகளுக்கு 3 மாதங்கள் பணி நீட்டிப்பு..!

அரசுப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3,000 ஆசிரியாகளுக்கு 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3,000 ஆசிரியாகளுக்கு 3 மாதங்கள் பணி நீட்டிப்பு..!
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த 1.8.2021 அன்றைய நிலவரப்படி அரசுப் பள்ளி மாணவாகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு இயக்குநரின் பொதுத் தொகுப்பிலிருந்து 3,000 உபரி பட்டதாரி ஆசிரியா பணியிடங்களுக்கு ஆசிரியாகள் நியமிக்கப்பட்டனா.

இதற்கிடையே, கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா சேக்கை அதிகரித்தது. இதனால் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3,000 ஆசிரியாகளுக்கு 18.5.2022 முதல் 17.5.2023 வரை மேலும் ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கூடுதலாக நியமிக்கப்பட்ட 3,000 ஆசிரியாகளின் பணிக்காலம் புதன்கிழமை (நேற்றுடன்) நிறைவடைந்த நிலையில் அவாகளுக்கு மேலும் மூன்று மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து ஊதியம் வழங்குவதற்கான விரைவு ஆணையை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com