கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது
Published on

தூத்துக்குடி ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மேற்பார்வையில் சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தூத்துக்குடி புஷ்பாநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் தாளமுத்துநகர் வெள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த அந்தோணிராஜ் (வயது 45), போல்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (52), புஷ்பாநகரை சேர்ந்த டேவிட்சன் (23) ஆகியோர் என்பதும், அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது.

உடனே போலீசார், அந்தோணிராஜ், ஜெயக்குமார், டேவிட்சன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com