டாஸ்மாக் பாரில் ரகளை செய்த 3 பேர் கைது

தென்காசி டாஸ்மாக் பாரில் ரகளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
டாஸ்மாக் பாரில் ரகளை செய்த 3 பேர் கைது
Published on

தென்காசி யானை பாலம் அருகே டாஸ்மாக் மதுபான கடையுடன் கூடிய பார் இயங்கி வருகிறது. இந்த பாரில் நேற்று முன்தினம் மதியம் குடிபோதையில் பணம் கொடுக்காமல் மேலும் மதுபானம் கேட்டு அங்கு பணியாற்றிய ஊழியரிடம் 3 பேர் தகராறு செய்துள்ளனர். பின்னர் அவதூறாக பேசி அங்குள்ள மதுபாட்டில்களை உடைத்தும், பிளாஸ்டிக் நாற்காலிகளை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து தென்காசி போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி தென்காசி அருகே உள்ள நன்னகரத்தைச் சேர்ந்த செண்பகராஜ் என்ற பூராஜ் (வயது 45), மேலகரம் ஸ்டேட் பேங்க் காலனி முதல் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராஜ் என்ற அந்தோணி ராஜ் (21), வினோத் என்ற முபாரக் (32) ஆகியோரை கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com