லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
Published on

நாகாகோவில்:

நாகர்கோவில் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்தின் போல் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கோட்டார் ஆறுமுகம்பிள்ளை தெருவை சேர்ந்த விஷ்ணுகாந்த் (28) என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் விற்பனைக்காக வைத்திருந்த 5 லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதே போல வெள்ளாளர் மேலத் தெருவை சேர்ந்த மணிகண்டன் (52), இல்லத்தார் தெருவை சேர்ந்த நடராஜன் (58) ஆகியோரிடம் இருந்து 10 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com