செல்போன் திருடிய 3 பேர் கைது

செல்போன் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
செல்போன் திருடிய 3 பேர் கைது
Published on

விருதுநகர் மாவட்டம் ராமசாமியாபுரத்தை சேர்ந்தவர் குருவையா மகன் குருவானந்தம் (வயது 34). இவரின் உறவினர் நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இவரை பார்ப்பதற்காக குருவானந்தம் ஆஸ்பத்திரிக்கு வந்தார். நேற்று முன்தினம் அவர் ஆஸ்பத்திரி வளாகத்தில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் குருவானந்தனின் செல்போன், செல்போன் பவர்பேங் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றனர். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் விரட்டி சென்று 3 பேரையும் பிடித்து நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில் அவர்கள் பாளையங்கோட்டையை சேர்ந்த முத்துவேல் மகன் தினேஷ் (23), திம்மராஜபுரத்தை சேர்ந்த திருப்பதி மகன் மாரிமுத்து (22), பாளையங்கோட்டையை சேர்ந்த பெருமாள் (24) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com