3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா, மதுவிற்ற 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

அரக்கோணம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அரக்கோணம் விண்டர்பேட்டை பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 22) என்பவரை அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேப் போன்று அரக்கோணம் பழனிப்பேட்டை பகுதியை சேர்ந்த சூர்யா (19) என்பவரை அரக்கோணம் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் இருவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் நாகராஜ் மற்றும் சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.

மேலும் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆற்காட்டை அடுத்த சின்னகுக்குண்டி பகுதியை சேர்ந்த ரவி (48) என்பவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com