திருச்செங்கோடு அருகே 10 வயது சிறுமி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு

அரிவாள் வெட்டு சம்பவத்தில் சிக்கிய சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்செங்கோடு அருகே 10 வயது சிறுமி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு
Published on

திருச்செங்கோடு,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே 10 வயது சிறுமி உள்பட 3 பேர் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளனர்.

முன்னதாக தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை ஐ.டி. ஊழியரான செந்தில் குமார் என்பவர் வெட்டியுள்ளார்.

குழந்தையின் சத்தம் கேட்டு தடுக்க வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த தங்கராசு, முத்துவேலுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

போலீஸ் விசாரணையில் செந்தில் குமார் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com