விஷம் குடித்து விவசாயி உள்பட 3 பேர் தற்கொலை

வெவ்வேறு சம்பவத்தில் விஷம் குடித்து விவசாயி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
விஷம் குடித்து விவசாயி உள்பட 3 பேர் தற்கொலை
Published on

விவசாயி தற்கொலை

ஆலங்குடி அருகே டி.களபம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா (வயது 60). விவசாயி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார்.

இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்லையா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சாவு

ஆலங்குடி அருகே வடகாட்டை சேர்ந்தவர் சிலம்பரசன் (40). இவர் கடந்த 3-ந் தேதி ஆலங்குடி அம்புலி ஆற்று பாலம் அருகில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சிலம்பரசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் இதுகுறித்த புகாரின் பேரில், ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி

கறம்பக்குடி அருகே துவார் பெத்தாரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (23). இவர் மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள ஒரு சலூன் கடையில் முடி திருத்தும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு நீண்ட காலமாக வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த நிலையில் இருந்த இவர் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.

இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரமேஷின் தாய் வள்ளிக்கண்ணு கொடுத்த புகாரின் பேரில், மழையூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com