வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 3 பேர் சாவு

வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 3 பேர் இறந்தனர்.
வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 3 பேர் சாவு
Published on

வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 3 பேர் இறந்தனர்.

செல்போனில் பேசியபடி...

திண்டுக்கல், என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் பிரகாஷ் (வயது 18). இவர் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் நடைபெற்ற உறவினரது திருமண விழாவில் பங்கேற்க வந்திருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டு மாடியில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் பிரகாஷ் கடந்த புதன் கிழமை செல்போன் பேசிக்கொண்டே மாடியில் இருந்து இறங்கியபோது, எதிர்பாராத விதமாக மாடியின் கைப்பிடி சுவரில் விழுந்துள்ளார். அப்போது சுவர் இடிந்ததில், நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிரைவர் பலி

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்தவர் சுதாகர் (47). டிரைவரான இவர் நேற்று அதிகாலை கரூரில் இருந்து திருச்சி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அதிகாலை 3.45 மணி அளவில் ஜீயபுரம் பகுதியில் கார் வந்த போது, எதிரே திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற லாரி மோதியது. இதில் சுதாகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எலக்ட்ரீசியன் தற்கொலை

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை பாண்டியன் தெருவை சேர்ந்தவர் சகாயராஜ் (40). எலக்ட்ரீசியன். இவரது மனைவி ஜான்சிராணி. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் சகாயராஜ் வாங்கிய கடனை கட்டமுடியாமல் அவதி அடைந்து வந்தார். இதன்காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் 2 மாதமாக வீட்டிற்கு வாடகை தரவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே ஜான்சிராணி கணவரிடம் கோபித்துக்கொண்டு தாய்வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலையில் சகாயராஜ் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்த போது சகாயராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்த பொன்மலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சகாயராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் குடும்ப பிரச்சினையில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com