கடலில் மூழ்கி அக்காள்-தங்கை உள்பட 3 பேர் பலி

வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த அக்காள்-தங்கை உள்பட 3 பேர் கடலில் மூழ்கி பலியானார்கள்.
கடலில் மூழ்கி அக்காள்-தங்கை உள்பட 3 பேர் பலி
Published on

வேளாங்கண்ணி

வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த அக்காள்-தங்கை உள்பட 3 பேர் கடலில் மூழ்கி பலியானார்கள்.

மானாமதுரையை சேந்தவர்கள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ராஜகம்பீரம் பகுதியை சேர்ந்தவர் சேவியர். இவருடைய மகள்கள் ஆரோக்கிய செரின்(வயது19), சகாயரியானா(13). அதே பகுதியை சேர்ந்த பெஞ்சமின்ராபர்ட் மகள் சஹானா (14).ஆரோக்கிய செரின் மானாமதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டும், சகாயரியானா அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பும், சஹானா 8-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

ராட்சத அலை இழுத்து சென்றது

இந்த நிலையில் உறவினர்களான சேவியர் குடும்பத்தினரும், பெஞ்சமின் ராபர்ட் குடும்பத்தினரும் நேற்று காலை நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளனர்.பின்னர் அவர்கள் அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கினர். இதை தொடர்ந்து ஆரோக்கியசெரின், ரியானா, சஹானா ஆகிய 3 பேரும் கடலில் குளித்துள்ளனர். அப்போது எழுந்த ராட்சத அலை 3 பேரையும் இழுத்து சென்றதால் கடலில் மூழ்கினர்.

3 பேர் சாவு

உடனே அருகில் குளித்து கொண்டிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஆரோக்கியசெரின், ரியானா, சஹானா ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

சோகம்

இதுகுறித்து வேளாங்கண்ணி கடலோர காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த அக்காள்-தங்கை உள்பட 3 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com