வாலிபரை ஆட்டோவில் வைத்து தாக்கிய 3 பேர் சிறையில் அடைப்பு

வழிப்பறி செய்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்த 3 பேர் ஆட்டோவில் வைத்து வாலிபரை சரமாரியாக தாக்கினர். இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாலிபரை ஆட்டோவில் வைத்து தாக்கிய 3 பேர் சிறையில் அடைப்பு
Published on

பணம் பறிப்பு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, தொண்டமாந்துறை பகுதியை அமுல்ராஜ். இவரது மகன் மரியசார்லஸ் (வயது 19). இவர் நேற்று முன்தினம் காலை பெரம்பலூர் மின்சார அலுவலகத்திற்கு வந்து மின் கட்டணம் செலுத்தி விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு செல்வதற்காக புதிய பஸ் நிலையத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த பெரம்பலூர் சங்குபேட்டை இளங்கோ நகரை சேர்ந்த செந்தில்குமாரின் மகன் சாகுல்குமார் (19), மரிய சார்லசிடம் ரூ.50 கேட்டுள்ளா. இதற்கு அவர் பணம் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து அவர், மரிய சார்லசின் சட்டைப்பையில் இருந்த ரூ.1,300-ஐ பறித்து கொண்டு சென்றார்.

ஆட்டோவில் வைத்து தாக்குதல்

இதனால் அதிர்ச்சியடைந்த மரிய சார்லஸ், சாகுல்குமாரை தட்டி கட்டுள்ளார். இதில், ஆத்திரம் அடைந்த சாகுல் குமார், வெங்கடேசபுரத்தை சேர்ந்த ரத்தினவேலின் மகன் கார்த்திக்குடன் (23) சேர்ந்து, 13-வது வார்டு அழகிரி தெருவை சேர்ந்த ஜெயங்சங்கரின் மகன் ஜெயபிரகாஷ் (26) ஓட்டி வந்த ஷேர் ஆட்டோவில் ஏற்றி கொண்டு பாலக்கரை சுடுகாடு அருகே சென்றனர். அங்கு ஆட்டோவில் வைத்து மரிய சார்லசை 3 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து விரட்டி உள்ளனர்.

இதனைதொடர்ந்து மரிய சார்லஸ் புறநோயாளியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் அவர் நேற்று காலை பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு வந்து தனக்கு நடந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாகுல்குமார், ஜெயபிரகாஷ், கார்த்திக் ஆகிய 3 பேரையும் கைது செய்து திருச்சி மாவட்டம், துறையூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com