14 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதி 3 பேர் படுகாயம் - வீடியோ


14 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதி 3 பேர் படுகாயம் - வீடியோ
x
தினத்தந்தி 9 April 2025 11:32 AM IST (Updated: 9 April 2025 1:31 PM IST)
t-max-icont-min-icon

சிறுவன் ஓட்டிய கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

சென்னை

சென்னை வடபழனி பகுதியை சேர்ந்தவர் ஷாம். இவர் காரை வீட்டிற்கு முன் நிறுத்திவிட்டு தனது 14 வயது மகனிடம் சாவியை கொடுத்து கார் மீது கவர் போடுமாறு கூறியுள்ளார். ஆனால் சிறுவன் தனது நண்பரை காரில் ஏற்றிக்கொண்டு குமரன் நகர் மெயின் ரோடு வழியாக அதிவேகமாக சென்றுள்ளார்.

அப்போது சிறுவனின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்ற ஆட்டோ மற்றும் நடந்து சென்ற முதியவர் உள்ளிட்ட இருவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இது குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு சிறுவர்களையும் பிடித்து விசாரணை நடத்தி அவரது பெற்றோரை வரவழைத்து எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர்.

1 More update

Next Story