மது பாட்டில்களை பதுக்கிய 3 பேர் கைது

மது பாட்டில்களை பதுக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மது பாட்டில்களை பதுக்கிய 3 பேர் கைது
Published on

நெகமம் பகுதியில்  பொள்ளாச்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கரப்பாடி பிரிவு அருகே டாஸ்மாக் கடைக்கு பின்புறம் உள்ள முட்புதரில் சிவகங்கை மாவட்டம் முத்தூரை சேர்ந்த ஜெகநாதன்(வயது 40) மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டு இருந்தார். அவரை போலீசார் கைது செய்து, 14 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று காட்டம்பட்டியில் இருந்து வடசித்தூர் செல்லும் சாலை மற்றும் பனப்பட்டியில் இருந்து சுல்தான்பேட்டை செல்லும் சாலை ஆகிய இடங்களில் டாஸ்மாக் கடை அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை சேர்ந்த லூயிராஜ்(29), மணல்மேல்குடி பகுதியை சேர்ந்த காளிதாஸ்(29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 161 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com