மது விற்ற 3 பேர் கைது

மதுபானம் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மது விற்ற 3 பேர் கைது
Published on

திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அழகுபாண்டி, அருண் நாராயணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் திண்டுக்கல்லில், வத்தலக்குண்டு பைபாஸ் சாலை, குட்டத்துப்பட்டி, வாழைக்காய்பட்டி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு மது விற்றதாக ஆர்.எம்.காலனியை சேர்ந்த முத்துகுரு (வயது 45), கோனூரை சேர்ந்த முருகன் (39), வாழைக்காய்பட்டியை சேர்ந்த பால்ராஜ் (57) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com