சாராயம் விற்ற 3 பேர் கைது

மணல்மேடு பகுதியில் சாராயம் விற்ற 3 பேர் கைது
சாராயம் விற்ற 3 பேர் கைது
Published on

மணல்மேடு:

மணல்மேடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மணல்மேடு, காளி ஆகிய பகுதிகளில் சாராய விற்பனை நடப்பதாக மணல்மேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார், அங்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது காளி பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் காளி மேலப்பனையூர் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜ் (வயது 66), காளி கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பாரூக் (70) என்பதும், அவர்கள் 2 பேரும் சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதேபோல் மணல்மேட்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, மணல்மேடு மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ஜெயபால் (59) என்பவர் சாராயம் விற்றது தெரியவந்தது. இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜ், பாரூக், ஜெயபால் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com