சாராயம் விற்ற 3 பேர் கைது

நாட்டறம்பள்ளி பகுதியில் சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாராயம் விற்ற 3 பேர் கைது
Published on

நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள புதுப்பேட்டை, அக்ராகரம், பந்தாரப்பள்ளி, ஜங்காலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது புதுப்பேட்டை பகுதியில் சாராயம் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த ராமன் என்பவரின் மகன் ரமேஷ் (வயது 42) சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதேபோல் ஜங்காலபுரம் பகுதியை சேர்ந்த ராமநாதன் (54), பச்சூர் டோல்கேட் பகுதியை சேர்ந்த பூபாலன் மனைவி சின்னமணி (வயது 50) ஆகியோர் தங்களது வீடுகளின் பின்புறம் சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் ரமேஷ், ராமநாதன், சின்னமணி ஆகிய 3 பேரை கைது செய்து, திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com