கஞ்சா வைத்திருந்த சிறுவன் உள்பட 3 பேர் கைது

தேனியில் கஞ்சா வைத்திருந்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா வைத்திருந்த சிறுவன் உள்பட 3 பேர் கைது
Published on

தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி தலைமையில் போலீசார் கோடாங்கிபட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கோடாங்கிபட்டி-போடேந்திரபுரம் சாலையில் சந்தேகப்படும் படி நின்று கொண்டு இருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது அதற்குள் 2 கிலோ 700 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர்கள் கோடாங்கிபட்டியை சேர்ந்த செல்வம் மனைவி சரஸ்வதி (வயது 55), மாணிக்காபுரத்தை சேர்ந்த பேச்சிமுத்து மகன் அஜித் (21) என்றும், மற்றொருவன் 17 வயது சிறுவன் என்றும் தெரியவந்தது. மேலும் இந்த கஞ்சாவை கோடாங்கிபட்டியை சேர்ந்த பெருமாள் மனைவி சந்திரா என்பவரிடம் இருந்து வாங்கி வந்ததாக அவர்கள் கூறினர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் மற்றும் அஜித், சரஸ்வதி ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் சந்திராவை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com