

விருதுநகர் புல்லலக்கோட்டை ரோட்டை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 57). இவர் இந்நகர் ராமமூர்த்தி ரோட்டில் ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதிய சீட்டுகளையும் ரூ.500-யும் பறிமுதல் செய்த விருதுநகர் கிழக்கு போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல விருதுநகர் அருகே கன்னிசேரி புதூரைச் சேர்ந்த மாரீஸ்வரன் (28) தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த ரமேஷ் (38) ஆகிய 2 பேரும் கன்னிசேரி புதூர் கால்நடை ஆஸ்பத்திரி அருகே ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்ததாக அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதிய சீட்டையும், செல்போனையும் பறிமுதல் செய்த வச்சக்காரப்பட்டி போலீசார் மேற்படி இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.