பெருந்துறை, காஞ்சிக்கோவில் பகுதியில் வீடு புகுந்து திருடிய 3 பேர் கைது- 23 பவுன் நகைகள் மீட்பு

பெருந்துறை, காஞ்சிக்கோவில் பகுதியில் வீடு புகுந்து திருடிய 3 பேர் கைது- 23 பவுன் நகைகள் மீட்பு
பெருந்துறை, காஞ்சிக்கோவில் பகுதியில் வீடு புகுந்து திருடிய 3 பேர் கைது- 23 பவுன் நகைகள் மீட்பு
Published on

பெருந்துறை

பெருந்துறை மற்றும் காஞ்சிக்கோவில் பகுதிகளில், கடந்த மாதம் பல்வேறு இடங்களில், பூட்டியிருந்த வீடுகளில் கதவை உடைத்து, உள்ளே புகுந்து மர்ம நபர்கள் தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் நடந்தன.

இது குறித்து, நகைகளை பறிகொடுத்தவர்கள் பெருந்துறை மற்றும் காஞ்சிக்கோவில் போலீசில் புகார் செய்தனர். மேற்படி புகார்களின் பேரில் வழக்குகளை பதிவு செய்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில், பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சப் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், ராமச்சந்திரன் மற்றும் போலீசார், பெருந்துறை நகரின் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது பெருந்துறை- வெள்ளோடு ரோட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் 3 பேர் ரோட்டில் நடந்து வந்தனர். அந்த 3 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், 'அவர்கள் திருவாரூர் மாவட்டம், செம்மங்குடியைச் சேர்ந்த ராஜா மகன் சபரீசன் என்கிற சதீஸ் (வயது 27), தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பகுதியை சேர்ந்த கணபதி மகன் இசக்கிதுரை (25) மற்றும் திண்டுக்கல் மாவட்டம், தென்மாதிமங்கலத்தை சேர்ந்த வெங்கடாசலம் மகன் ராமஜெயம் (30) என்பதும், அவர்கள் பெருந்துறை சென்னிமலை ரோடு விக்னேஷ் நகர் மற்றும் காஞ்சிக்கோவில் பள்ளபாளையம் பகுதிகளில் நேரத்தில் பூட்டப்பட்டிருந்த வீடுகளில் கதவை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்து, பீரோக்களை திறந்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்துடன், அவர்களிடம் 23 பவுன் நகைகளையும் மீட்டனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com