மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி திருட்டு

மின் இணைப்பை சரிசெய்வது போல் நடித்து மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி திருடிய மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி திருட்டு
Published on

கறம்பக்குடி அருகே உள்ள தெற்கு வாண்டான்விடுதி கிராமத்தை சேர்ந்தவர் பொடிசா அம்மாள் (வயது 85). இவரது கணவர் வீரப்பன் ஏற்கனவே இறந்து விட்டார். மகன் வெளியூரில் வசித்து வருவதால் மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று இவரது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. அப்போது வீட்டிற்கு வந்த மர்ம ஆசாமி ஒருவர், மின் இணைப்பை சரி செய்வதாக கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த ஆசாமி, மின் இணைப்பை சரி செய்வது போல் நடித்து, ஜன்னலில் மூதாட்டி கழட்டி வைத்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை திருடிக்கொண்டு தப்பி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து மூதாட்டி பொடிசா அம்மாள் அளித்த புகாரின் பேரில் மழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com