3 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் திருட்டு

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 3 பவுன் நகைகள், ரூ.3 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
3 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் திருட்டு
Published on

தேனி பழைய டி.வி.எஸ். சாலையை சேர்ந்தவர் அழகேந்திரன் (வயது 30). தனியார் நிறுவன மேலாளர். இவருடைய மனைவி ஒரு நகைக்கடையில் விற்பனையாளராக உள்ளார். கடந்த 5-ந்தேதி இவர்கள் இருவரும் வீட்டில் உள்ள பீரோ, படுக்கை அறையை பூட்டாமல் வெளிப்புற கதவை மட்டும் பூட்டிவிட்டு காலணிகள் வைக்கும் பகுதியில் சாவியை மறைத்து வைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டனர். அழகேந்திரனின் மனைவி இரவில் வந்த போது வீடு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 3 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து அவர் தனது கணவருக்கு தகவல் கொடுத்தார். அவர் அங்கு வந்து பார்த்து விட்டு தேனி போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com