இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையைச் சேர்ந்த 3 பேர் கைது


இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையைச் சேர்ந்த 3 பேர் கைது
x

கோப்புப்படம் 

இலங்கையின் மன்னார் பகுதியை சேர்ந்த 3 பேர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.

சென்னை

இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற இலங்கையை சேர்ந்த 3 நபர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

கடலோர காவல் படையின் ஹோவர்கிராப்ட் எனப்படும் நீர்-நிலப்படகு ஏ.சி.வி.ஹெச் 197, இன்று காலை சுமார் 8 மணி அளவில் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது நான்காவது தீவுத்திட்டில் மூன்று பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

உடனடியாக கடலோர காவல் படை வீரர்கள் ஹோவர்கிராப்ட்டை அவர்களை நோக்கி திருப்பி அவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் இலங்கையின் மன்னார் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய அவர்கள் முயற்சித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் மண்டபம் கடற்கரைக்கு அழைத்து வரப்பட்டு தமிழ்நாடு போலீசாரிடம் மேல்விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

1 More update

Next Story