3 மாநில தேர்தல்: இளைஞர்களும், பெண்களும் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் - எல்.முருகன்

மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சியாக அமையும் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அசாம், கேரளம், புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இளைஞர்களும், பெண்களும் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கேட்டு கொண்டுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

அசாம், கேரளம் மற்றும் நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலங்களில் வாக்காளர்கள் அனைவரும் பெருந்திரளாக வந்து தங்கள் வாக்குகளை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சியாக அமையும். மாநிலத்தின் வளர்ச்சிக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இளைஞர்களும், பெண்களும் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com