காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி

பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது குறித்து மேலும் தகவல்கள் விசாரணைக்குப் பிறகு தெரிய வரும் என காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com