மணல் கடத்திய 3 டிராக்டர்கள் பறிமுதல்

மணல் கடத்திய 3 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மணல் கடத்திய 3 டிராக்டர்கள் பறிமுதல்
Published on

திருப்புனவாசல் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேல வசந்தனூர் கிராமம் அருகே வந்த 2 டிராக்டர்களை மறித்து போலீசார் சோதனை செய்ததில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தி வந்த 2 டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் செங்காணம் கிராமத்தை சேர்ந்த ஹிட்லர், கீழ வசந்தனூர் கிராமத்தை சேர்ந்த சுப்பையா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலுப்பூர் அருகே உள்ள பட்டியகாரன்பட்டி பகுதியில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இலுப்பூர் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் அதன் உரிமையாளர் சென்னப்பநாயக்கப்பட்டியை சேர்ந்த லோகேஷ் (வயது23) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com