பெரம்பலூர் அருகே வெள்ளாற்றில் குளிக்க சென்ற 3 பெண்கள் நீரில் மூழ்கி

பெரம்பலூர் அருகே வெள்ளாற்றில் குளிக்க சென்ற 3 பெண்கள் நீரில் மூழ்கி
பெரம்பலூர் அருகே வெள்ளாற்றில் குளிக்க சென்ற 3 பெண்கள் நீரில் மூழ்கி
Published on

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள இனாம் அகரம் கிராமத்தைச் சேர்ந்த ராமர் மனைவி பத்மா (வயது 35), அதே ஊரைச் சேர்ந்த குமார் மகள்கள் ராதிகா (22), ரேணுகா(18), வாடாமல்லி மகள் சகுந்தலா (14) ஆகியோர் அருகிலுள்ள வெள்ளாற்றில் குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது அந்த பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரில் திடீரென 4 பேரும் மூழ்கியுள்ளனர். அப்போது கூக்குரல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீரில் மூழ்கியவர்களை வெளியே கொண்டு வந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர்.

அங்கு பத்மா, ரேணுகா, சகுந்தலா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராதிகா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே ஊரை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் மூழ்கடிக்க செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com