போலி ரசீது உருவாக்கி இடம் விற்பனை செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை


போலி ரசீது உருவாக்கி இடம் விற்பனை செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை
x

மோசடியில் ஈடுபட்டதாக 6 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல்லை சேர்ந்த நபர் வெளிநாட்டில் கப்பலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, திண்டுக்கல்லில் நேரடியாக பணம் கொடுத்ததாக போலி ரசீது உருவாக்கி மோசடி செய்து இடத்தை விற்பனை செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட் -2 நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், மோசடியில் ஈடுபட்ட ராஜேந்திரன் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் இவ்வழக்கில் உள்ள மற்ற 5 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்

1 More update

Next Story