3 பேருக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை

நீடாமங்கலம் கோவில் சிலை திருட்டு வழக்கில் தொடர்புடைய 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
3 பேருக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை
Published on

கும்பகோணம்:-

நீடாமங்கலம் கோவில் சிலை திருட்டு வழக்கில் தொடர்புடைய 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சிலை திருட்டு

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பெரம்பூர் கிராமத்தில் வெங்கடாசலபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து கடந்த 2007-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐம்பொன்னால் ஆன வெங்கடாசலபதி சிலை திருட்டு போனது.

இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணை சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

3 பேர் கைது

இந்த வழக்கு தொடர்பாக திருவாரூர் மாவட்டம் பள்ளிவாரமங்கலம் நடுத்தெருவை சேர்ந்த இந்திரஜித்(வயது 47), பூவனூர் அக்ரஹாரம் தெருவை சேர்ந்த ராஜ்குமார்(35), மன்னார்குடி சஞ்சீவிராயன்கோவில் தெருவை சேர்ந்த இளங்கோவன்(46) ஆகிய 3 பேரையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள கூடுதல் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது.

3 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது இந்திரஜித், ராஜ்குமார், இளங்கோவன் ஆகிய 3 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கூடுதல் தலைமை குற்றவியல் நீதிபதி சண்முகப்பிரியா உத்தரவிட்டார். இதனையடுத்து 3 பேரையும் திருச்சி மத்திய சிறைக்கு போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

சிறை தண்டனை பெற்றுள்ள ராஜ்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீடாமங்கலத்தில் நடந்த கம்யூனிஸ்டு பிரமுகர் படுகொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com