30 பவுன் நகை, பணத்துடன் பட்டதாரி பெண் மாயம்

விருதுநகரில் 30 பவுன் நகை, பணத்துடன் பட்டதாரி பெண் மாயமானார்.
30 பவுன் நகை, பணத்துடன் பட்டதாரி பெண் மாயம்
Published on

விருதுநகர் கருப்பசாமி நகரை சேர்ந்தவர் சீதாலட்சுமி (வயது 44). இவர் நகரில் உள்ள தனியார் தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக உள்ளார். இவரது மகள் சிவப்ரகதி (22). பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியார் மருத்துவ பரிசோதனை நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். வேலை பிடிக்காத நிலையில் கடந்த ஒரு வாரமாக வீட்டில் இருந்து வந்தார். இந்தநிலையில் திடீரென சிவப்ரகதி வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். தனது தாயாருக்கு செல்போனில் அனுப்பியுள்ள தகவலில் பிடித்த வாழ்க்கையை தேடி போகிறேன் என்று தெரிவித்துள்ளதுடன் வீட்டிலிருந்து ரூ. 50 ஆயிரம் மற்றும் 30 பவுன் நகை, பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை எடுத்து சென்றுள்ளார். இதுபற்றி சீதாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விருதுநகரில் 30 பவுன் நகை, பணத்துடன் பட்டதாரி பெண் மாயமானார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com