நகைக்கடை ஊழியர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை சென்னையில் பூட்டிய வீட்டை உடைத்து துணிகரம்

சென்னை தியாகராயநகர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 45). இவர் ஈரோட்டில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஊழியராக வேலை செய்கிறார். இவரது மனைவி அன்னபூரணி (42) தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். ஏழுமலை ஈரோட்டில் தங்கி இருந்து வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் அன்னபூரணி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு போய்விட்டார்.
நகைக்கடை ஊழியர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை சென்னையில் பூட்டிய வீட்டை உடைத்து துணிகரம்
Published on

சென்னை,

சென்னை தியாகராயநகர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 45). இவர் ஈரோட்டில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஊழியராக வேலை செய்கிறார். இவரது மனைவி அன்னபூரணி (42) தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். ஏழுமலை ஈரோட்டில் தங்கி இருந்து வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் அன்னபூரணி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு போய்விட்டார்.

யாரோ மர்ம நபர்கள் பூட்டிய வீட்டை உடைத்து புகுந்துள்ளனர். வீட்டில் இருந்த 30 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றுவிட்டனர். வேலை முடிந்து இரவு வீடு திரும்பிய அன்னபூரணி, வீட்டில் நகைகள் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பாண்டிபஜார் போலீசில் புகார் கொடுத்தனர். உதவி கமிஷனர் தேவராஜ் சம்பவம் நடந்த வீட்டில் நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையர்களின் உருவத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com