தனியார் நிறுவன உரிமையாளருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்

தனியார் நிறுவன உரிமையாளருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தனியார் நிறுவன உரிமையாளருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே இலஞ்சியை அடுத்த வள்ளியூர் பகுதியில் உள்ள தனியார் சிப்ஸ் நிறுவனத்தில் தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு தயாரித்து சீலிட்ட பாக்கெட்டில் விற்பனைக்கு வைத்திருந்த நேந்திரம் வாழைக்காய் சிப்ஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பினார். இதில் சிப்சிஸ் அதிகப்படியான செயற்கை வண்ணம் கலந்து இருந்ததும், தரம் குறைந்த பாதுகாப்பற்ற உணவுப்பொருள் என்பதும், லேபிளில் குறைபாடுகள் இருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து சிப்ஸ் தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர மாவட்ட நியமன அலுவலர் மூலமாக மாநில உணவு பாதுகாப்பு ஆணையருக்கு அனுமதி கோரப்பட்டது. தொடர்ந்து மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வேனா அனுமதி அளித்ததின்பேரில், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன், செங்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி சுனில்ராஜா, குற்றம் சாட்டப்பட்ட தனியார் சிப்ஸ் நிறுவன உரிமையாளர் பிலிப் ஜான் ஜோசப் என்பவருக்கு ரூ.30 ஆயிரம் அபராதமும், கோர்ட்டு கலையும் வரை சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுரேஷ் ஆஜரானார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com