

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதையடுத்து மாநகர்நல அலுவலர் இந்திரா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் திண்டுக்கல் பகுதியில் உள்ள கடைகளில் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி நேற்று தாலுகா அலுவலக சாலையில் உள்ள கடைகள், பார்சல் நிறுவனங்களில் சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது திண்டுக்கல்லுக்கு லாரியில் கொண்டுவரப்பட்ட 300 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.