2 மாதங்களில் 300 கோடி பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படும் - அமெரிக்க பல்கலைக்கழகம் கணிப்பு

2 மாதங்களில் 300 கோடி பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படும் என்று அமெரிக்க பல்கலைக்கழகம் கணித்துள்ளது.
2 மாதங்களில் 300 கோடி பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படும் - அமெரிக்க பல்கலைக்கழகம் கணிப்பு
Published on

புதுடெல்லி,

புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. வேகமாக பரவக்கூடிய இந்த வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இன்னும் இரண்டே மாதங்களில் உலகமெங்கும் 300 கோடி பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படும், தினசரி 3 கோடி பேருக்கு இதன் பாதிப்பு ஏற்படும் என்று அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகள் இனஸ்டிடியூட் கணித்துள்ளது.

இது குறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 2 மாதங்களில் சுமார் 300 கோடி நோய்த்தொற்றுகள் ஏற்படும் என்று ஆராய்ச்சி கணிப்பு கூறுகிறது. ஜனவரி மத்தியில் தொற்று உச்சம் அடையும். அப்போது தினமும் 3 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்படும். ஏப்ரல் மாதத்தில டெல்டா அலை உச்சத்தை விட இது 3 மடங்கு அதிகம் ஆகும் என கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஒமைக்ரான் பாதிப்பு ஆஸ்பத்திரி சேர்க்கையை டெல்டாவுடன் ஒப்பிடுகிறபோது 90-96 சதவீதம் குறைவாக இருக்கும். பலி எண்ணிக்கையும் டெல்டாவுடன் ஒப்பிடும்போது 97-99 சதவீதம் குறைவாக இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com