

சென்னை,
சென்னை அண்ணா நகரில் உள்ள வீடு ஒன்றில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் உட்கார்ந்த நிலையில் ஒரு மாரியம்மன் சிலை மற்றும் நடனமாடும் நடராஜர் சிலை ஆகியவற்றை சிலை கடத்தல் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சிலை 300 ஆண்டுகள் பழமையானது என்றும், கள்ளச்சந்தையில் பல கோடி ரூபாய் மேல் விலை எனவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருடப்பட்ட சிலைகள் எந்த கோவிலில் உள்ளது மற்றும் அவற்றின் தொன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.