3000 ஆண்டுகள் மூத்த தமிழ் மொழியால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு பெருமை கவிஞர் வைரமுத்து

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நிதி வழங்கும் விழாவில் கவிஞர் வைரமுத்து 3000 ஆண்டுகள் மூத்த தமிழ் மொழியால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு பெருமை என கூறினார். #tamilchairdonation #tamilchair #vairamuthu
3000 ஆண்டுகள் மூத்த தமிழ் மொழியால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு பெருமை கவிஞர் வைரமுத்து
Published on

சென்னை

ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கைக்காக ரூ.5 லட்சம் நிதி வழங்கினார் வைரமுத்து. ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நிதி வழங்கும் விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-

ஏழைக் கவிஞன் என்பதால்தான் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.5 லட்சம் கொடுத்துள்ளேன். 3000 ஆண்டுகள் மூத்த தமிழ் மொழியால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு பெருமை. எல்லாத் தகுதியும் உடைய தமிழ் மொழியை ஹார்வர்டு பல்கலைக்கு தாமதமாக கொண்டு சென்றுள்ளோம்.

அறிவுலகம் வகுத்த தகுதிக்கும் மேல் தகுதி கொண்டது தமிழ் மொழி.இதுவரைக்கும் இருக்கையில் இருக்கிற மொழிகள் எல்லாம் வாழும் என்று சொல்ல முடியாது.சீன மொழிக்கு இணையாக இருக்கும் மொழிதான் தமிழ் மொழி

தமிழ் செம்மொழி என்ற அறிவிப்புக்கு காரணமாக இருந்த கருணாநிதி, மன்மோகன் சிங் ஆகியோருக்கு நன்றி.

இந்தியாவுக்கு சென்றால் வடக்கே மட்டும் ஆய்வு செய்யாமல் தெற்கே செல்ல வேண்டும் என கூறுவார்கள்

தமிழையும் சேர்த்தால்தான் பண்பாடு 100 விழுக்காடு நிரம்பும். எந்த தீமைக்குள்ளும் ஒரு நன்மை உண்டு. ஒரு தீமை வந்தது அது எங்கெங்கோ இருந்த தமிழ் சிங்கங்களை ஒன்று சேர்த்தது. என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com