திருவள்ளூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்பொதுமக்களிடம் 301 மனுக்கள் பெறப்பட்டது.

திருவள்ளூரில் கலெக்டர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் 301 மனுக்கள் பெறப்பட்டது.
திருவள்ளூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்பொதுமக்களிடம் 301 மனுக்கள் பெறப்பட்டது.
Published on

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சினைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

இதில் நிலம் சம்பந்தமாக 83 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 33 மனுக்களும், வேலை வாய்ப்பு வேண்டி 47 மனுக்களும், பசுமை வீடு அடிப்படை வசதிகள் வேண்டி 60 மனுக்களும் இதர துறைகள் சார்பாக 78 மனுக்களும் என மொத்தம் 301 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

முன்னதாக திருநின்றவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்த சேகர் என்பவர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை தொடர்ந்து அவரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், உதவி ஆட்சியர் (பயிற்சி) கேத்தரின் சரண்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com